Posts

Showing posts from 2014

தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ வெளியீட்டு விழா உரை

Image
தமிழ்மகனின் புதிய சிறுகதைத் தொகுதி ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ வெளியீட்டு விழா உரை எஸ். சங்கரநாராயணன் கவிக்கோ அரங்கம், மயிலை 28,12,2014 மாலை 06 மணி நூல் வெளியீடு உயிர்மை பதிப்பகம்   ஜ ன் ன ல் ம ல ர்     ப தினைந்து இருபது வருடங்களுக்கு முன்பே, தமிழ்மகனின் ஒரு புத்தகத்துக்கு முன்னுரை தந்திருக்கிறேன். ‘தமிழ்மகன் ஆற்றுப்படை‘ என்று அதற்குத் தலைப்பு வைத்ததாக நினைவு. இப்போதும் அதே வேலையை, இரண்டாம் முறையாகச் செய்ய வந்திருக்கிறேன். அவரது ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்‘ நூலை வெளியிடவும், அவரை வாசகருக்கு சிபாரிசு செய்யவுமாக இப்போது இங்கே என் பணி அமைகிறது.      எனக்கு தமிழ்மகனின் எழுத்து பிடித்திருக்கிறது. ஆகவே இரண்டாம் முறையும வந்திருக்கிறேன். எல்லாருக்கும் தமிழ்மகனின் எழுத்து பிடிக்கும். உறுத்தாத, வாசிக்க சிரமம் இல்லாத எழுத்து அவருடையது. பிரமைகள் அற்றது அது.  தத்துவார்த்த அலட்டல்கள் அவரிடம் இல்லை. ஆகவே அது அவரது எழுத்திலும் இல்லை. அதனால், தன் பாத்திரத்தையும் வாசகனையும் அவர் ஒருபோதும் இவ்விதத்தில் தொந்தரவு செய்வது கிடையாது. வாழ்க்கை ஒருபோதும் தத்துவங்களால்
Image
சிறுகதை எஸ்.எம்.எஸ். சைலபதி * உங்களில் எத்தனை பேர் மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் பார்த்தீர்கள்? அது சற்று முன் வெளிவந்த படம். இது 2011 கல்கி இதழில் வெளியான என் நண்பனின் கதை. 2013ல் அப்துல்காதரின் குதிரை புத்தகத்திலும் இது இடம் பெற்றுள்ளது. இதற்கும் மிஷ்கின் இயக்கிய பிசாசு கதைக்கும் ஒட்டுதல் உறவுகள், தாயாதி முறை, பங்காளி முறை இருக்கா இல்லையா? * அ வர், பார்ப்பதற்கு நாகரிகமான ஒரு மருத்துவரையோ வழக்கறிஞரையோ போலத்தான் இருந்தார். அமானுஷ்யத்தன்மை ஏற்படுத்தும் எதுவும் அங்கு இல்லாதது என் கற்பனைகளைப் பொய்யாக்கியது. எத்தனை நாகரிகமாக இருந்தாலும் எனக்கு அந்த இடம் மிகவும் வெறுப்பையே தந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான் ஒன்றும் பகுத்தறிவுப் பாசறைக்காரனல்ல என்றபோதும் இவற்றிலெல்லாம் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும் வேறு வழியில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டேன்.   பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார். "என்ன பிரச்சினை?"   என் உதடுகள்
Image
short story மீனாக மாறியவன் எஸ். சங்கரநாராயணன் கி ராமமெல்லாம் முகம் மாறி ரொம்பக் காலமாச்சு. இப்போது அந்தப் பழைய முகத்தைப் பார்க்க எத்தனை ஆசையாய் இருக்கிறது...   ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு முகம் இருந்தது. சட்டென்று அடையாளங் காண்கிற முகம். அணிகிற வஸ்திரங்களின் அடர்சாயம் போல. கிழவன்கோவில் என்றால் கொடுவாள் மீசைக்கார முனி. காவல்தெய்வம். அதன் கோவில்கொடை. திருநாள்க் கொண்டாட்டம்...   திறந்த வயல்வெளியும் அங்கே புதுசு புதுசாய்க் கோடையில் பறவைகள் வந்தடைவதுமான 'மாந்தோப்பு'....   இப்போதுபோல அப்போது பத்து நிமிஷத்துக்கொருதரம், பதினைந்து நிமிஷத்துக்கொருதரம் பஸ் கிடையாது. இத்தனை வாகனப்புகை கிடையாது. ஊர் சுத்தமாய் இருந்தது. எப்பவாவது வரும் பஸ். வரப்போக அதன் பின்னால் கிளம்பும் புழுதி. ஊய்யென்று அதன் பின்னால் ஓடிச்செல்லும் பொடிசுகள். ''வாங்கண்ணே, வாங்க மாமா, செளக்யந்தானே?'' என்று ஏற்றிக் கொள்கிற கண்டக்டர்.   எங்கள் ஊருக்கு என்ன அடையாளம்?   ஆ, ஹிக்கிரிகிரி! ஆச்சரியம். ஒரு கிறுக்குப்பயலை வைத்து, அதுவும் எங்கிருந்தோ எப்படியோ மழைத்தண்ணீர் போல வந்து ஊரில் ச
Image
வனாந்திர ராஜா மிகைய்ல் பிரிஸ்வின் (ருஷ்யா) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ஒ ரு கோடைநாளில் நடந்தது இது! மழைக்கு முந்தைய வனாந்திரம் பற்றி இப்போது சொல்கிறேன்! ஒவ்வொரு சின்ன இலையும், பைன்மரத்தின் ஒவ்வொரு ஊசியும் முதல்மழையின் முதல்துளியை அனுபவிக்க ஆவேசப் பட்டன. ஒவ்வொரு சிற்றுயிரும்கூட மழை பற்றிய சுத்த சுயமான பிரக்ஞையில் உறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி நான் போனேன். எல்லாமே, மனிதர்களைப் போலவே, என்னைத் திரும்பிப் பார்த்தன, ஏதோ நான்தான் கடவுள்போல!.... மழையை அனுப்பச் சொல்லி என்னிடம் அவை கெஞ்சுவதாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! "வாங்க பெரியவரே...." நான் மழையிடம் பிரார்த்தனை செய்தேன். "நாங்க காத்துக் காத்து அலுத்துப் போனம்யா. எப்பிடியும் நீரு வர்ற ஆள் தானே? அதான்.... ம்... வெரசா வந்து சேரும்!" ஆனால் மழை என்னை சட்டை பண்ணுகிறாப்போல இல்லை. புதுசா நார்த்தொப்பி ஒண்ணு நான் மாட்டிக்கிட்டிருந்தேன். மழை பெய்தால் அதோட கதி அதோகதிதான்!.... தாங்காது என்று நினைத்துக் கொண்டே வரும்போது, ஒரு வசமான பிர் மரத்தை நான் கவனித்தேன்! நல்ல நிழலாய் மொத்த முழுமைக்கும் விரிந