Posts

Showing posts from October, 2014
Image
சிறுகதை பூ உதிர்ந்த ரோஜாச் செடி எஸ். சங்கரநாராயணன் கிராமத்தில் அவனவன் வேலை வெட்டி இல்லாமல்,  பார்ட் டைம் லவ்,  ஃபுல் டைம் லவ்னு திரிகிறான் . வேலுமணியும் அவன் சம்சாரமும் நேரிலேயே வந்து பாக்கு வெத்திலை வைத்து அழைத்தார்கள். அவன் தங்கைக்குக் கல்யாணம். பாவாடை தாவணியுடன் விசுக் விசுக்கென்று வீட்டில் நடமாடிக் கொண்டிருப்பாள். கிருஷ்ணாவும் மணியும் பேசிக்கொண்டிருக்கும்போது தாண்டிப் போக நேர்ந்தால் முகமெல்லாம் வெட்கம் பரவிக் கனியும். காலம் எப்படி வேகமெடுத்து ஓடுகிறது.       அப்பாவுக்கு மணியைப் பிடிக்கும். காலில் வாதம் வந்தபிறகு அதிகமாய் எழுந்து அவர் நடமாடக் கொள்ளவில்லை. இவனும் அவரை வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். வாசல் பார்க்க காற்று வாங்கியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்தவர் ''கிருஷ்ணா? யார் வந்திருக்காங்க பார்!'' என்றார் உற்சாகமான குரலில்.       சென்னையில் இருந்து திருச்சி ஒரு ராத்திரி தூரம். அவன் சம்சாரமும் எதோ ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிறாள். என்றாலும் மாதம் ஒரு தடவையாவது திருச்சி வந்து அப்பா அம்மாவை, தங்கையைப் பார்த்துவி
Image
நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984 ல் எழுதிய ஒரு உண்மைக்கதை . மணிபர்ஸ் ஆர்னால்ட் ஃபைன் ( அமெரிக்கா ) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ம கா குளிரான ஒரு தினம் . நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ் . யாரோ தெருவில் தவறுதலாக தொலைத்திருக்கிறார்கள் . கையில் எடுத்து விரித்துப் பார்த்தேன் . அதன் சொந்தக்காரர் பற்றி எதும் துப்பு கிடைக்கலாம் . ஆனால் அதில் வெறும் மூணு டாலர்கள் மாத்திரமே இருந்தன . கூட ஒரு கசங்கிய கடிதம் . பல வருடங்களாக அது பர்சிலேயே இருந்திருக்கும் என்று பட்டது . கடித உறை கந்தலாகியிருந்தது . அனுப்பியவர் முகவரி தவிர வேறெதுவும் அதில் கண்டுகொள்ள முடியவில்லை . கடிதத்தைப் பிரித்தேன் . அதில் எதும் அடையாளம் சிக்கினால் நல்லது . எழுதப்பட்ட தேதி ... 1924. ஏறத்தாழ அறுபது வருஷம் முன்னால் !                 அழகான பெண்கையெழுத்து அது . நீல மை . கடிதத்தின் இடதுமூலையில் சிறு பூ சித்திரம் . காதல் வாசனை தட்டிய கடிதம் தான் . மைக்கேல்