Posts

Showing posts from November, 2014
Image
கி ரு ட் டி ன ம் மா எஸ். சங்கரநாராயணன் கி ருட்டினம்மாவை மறக்க முடியுமா ? எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா . ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது அவளால் . சதா எதாவது செய்துகொண்டிருக்கப் பிரியம் கொண்டவள் . என் தாய்க்கு அந்த விவரம் தெரியும் . அவள் தினசரி வேலைக்கு என்று வருகிறது அந்தக் காலை ஆறரை மணி . சற்று வேகவேகமான நடை . அந்த ஆறரை மணிக்கு எதற்கு இந்த வேகம் ? அவள் நடையே அப்படி . குணமே அப்படி , என்று பிறகு தெரிந்து கொண்டோம் . அவள் மனசில் இயங்கிக் கொண்டிருந்தது கடிகாரம் . அவள் வரும் நேரம் அம்மா அறிவாள் . அவளுக்கு ஒத்தாசையாக பத்துபாத்திரங்களை முற்றத்தில் கொண்டு போட்டிருக்கலாம் அம்மா . செய்திருக்க மாட்டாள் . கிருட்டினம்மா வந்து நிற்பாள் . '' இன்னும் பாத்திரம் போடலியாம்மா .... எனக்கு நேராவுதும்மா '' என்பாள் பொறுமையில்லாமல் . '' கொஞ்சம் இரு கிருட்டினம்மா . கைவேலையா இருக்கேன்ல ...'' கிருட்டினம்மா காத்திருக்க மாட்டாள் . அவளே பா
Image
நீ ரா ல்  அ மை யு ம் எஸ். சங்கரநாராயணன் அ ம்மன்கோவிலில் அருகே, யானையாய்க் கட்டிக் கிடந்தது தேர். நல்லா நாலாள் உயரத்துத் தேர். வருடம் ஒருமுறை அதை சுத்தம் செய்து, மராமத்து பார்த்து, தேர் இழுப்பார்கள். தைப்பூச திருவிழாக் காலங்கள் உற்சாகமானவை. ராஜேஸ்வரி திருவிழா பார்க்க வீட்டோடு வந்திருக்கிறாள். கோவிலடியும், அந்தத் தேர் வளாகமும், திடலும் எல்லாமே திருவிழாச் சமயங்களில் எப்படி ஜோராய்க் கனவுச்சாயல் கொண்டு விடுகின்றன. திடல் பரபரத்துவிடுகிறது. பொறிகடலை, ஷர்பத் கடைகள். மனுசத்தலையும், பாம்புஉடலுமான நாககன்னிகை. அதைப் பார்க்க அழைக்கிற வித்தியாசமான 'ர்ரூம்' அதிர்வு ஒலி. ஊரில் பத்துக்கு ஆறுபேர் மொட்டையடித்து, தலையில் சந்தனம் பூசித் திரிகிறார்கள்... காலத்தை அனுசரித்து, இப்போது திடீர் புகைப்படக் கடைகள். கொடக், என்ன பேர் இது? படம் எடுக்கிற சத்தமா! - அதில் விஜய், விக்ரம், சூர்யா பிளைவுட்-உருவங்கள். கூடநின்று படம் எடுத்துக் கொள்ளலாம். கம்பியூட்டரில் ராசி பலன். என்றாலும் ஒருபக்கம், லேகிய விற்பனை. பீமபுஷ்டி அல்வா. ஜோதிகா வளையல். கையில் வாச் கட்டினாப்போல ஜவ்வ