Posts

Showing posts from 2015

(1998ன் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாவல்) cover illustration JEEVA

Image
(1998ன் இலக்கியத்திற்கான  நோபல் பரிசு பெற்ற நாவல்) பார்வை  தொலைத்தவர்கள் யோசே சரமாகோ தமிழில் எஸ். சங்கரநாராயணன் ••• நாவலின் பகுதி ••• அதிகாலை மணி மூணுக்கு மேல் இருக்கும். முட்டியால் தாங்கி சிரமப்பட்டு திருடன் எழுந்து உட்கார்ந்தான்.       அவன் காலில் உணர்ச்சியே இல்லை. ஆனால் அந்த வலி மாத்திரம் இருந்தது. மற்றபடி அந்தக் கால், அது அவனுடையதே அல்ல. கால் முட்டி விரைத்திருந்தது. தனது நல்லநிலையில் இருக்கிற மற்ற கால் பக்கமாக உடம்பைத் திருப்பிக்கொண்டான். அதைக் கட்டிலில் இருந்து தொங்கப் போட்டிருந்தான். இப்போது தன் ரெண்டு கையாலும் காயம் பட்ட காலைப் பற்றி அதை முன் கால் வாட்டத்துக்கு நகர்த்த முற்பட்டான்.       சுரீர் என்று ஓநாய்கள் ஒன்றாய்ப் பாய்ந்தாப் போல அவனுள் வலி ஆளையே புரட்டியெடுத்து விட்டது. காயத்தின் கிண்ணத்தில் இருந்து பொங்கி எழுந்துவந்த அலையாய் வலி.       கைகளை ஊன்றியபடி உடம்பை மெல்ல படுக்கையில் நகர்த்தி வார்டின் நடு நடைபாதைப் பக்கமாய் நகர முயன்றான். கட்டிலின் கால்பக்க இரும்புத் தண்டை அடைந்தான். ஹா என ஆஸ்த்மா கண்டாப்போல கடுமையான மூச்சிறைப்பு. கழுத்தில் நிற்கா

2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்

Image
short story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து   அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறை நாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது. ‘யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா?... என்று கால்மாட்டில் பெண்அள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்கு பச்சைக் கண்டாங்கிதான், பொருந்துகிறது. சாயங்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தென்னந் தோப்புக்கு அப்பால், வாழைப் பண்ணையைத் தாண்டி, பாறைகள் நிறைந்த ஆற்றின் புது வெள்ளத்தின் குளிரைக் காற்று சுமந்து வருகிறது. காக்கைகள் கூட்டுக்குப் பறந்து போகின்றன. தாழைப்புதர் வேலிகளின் நடுவில்- வாய்க்கால் கரையிலிருந்து , முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டு

பத்தி chennai floods - a thing not to forget

Image
chennai floods - a thing not to forget நலம். நலமறிய அவா 06 திசம்பர் 2015 செ ன்னை நூறு வருடங்களுக்குப் பின் இத்தகைய கன மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறதாகச் சொல்லப் படுகிறது. சென்னை, கடலூர் மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் கடும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. ஏராளமான உயிர்ப் பலிகள். பொருட் சேதங்கள். வாழ்விடங்களை இழந்து பாமர சனங்கள் தவித்து நிற்கிறார்கள். சராசரி மனிதனின் கடும் உழைப்பின் சேமிப்புகளால் கிடைத்த வீட்டுப் பொருட்கள் அத்தனையும் மூழ்கிக் கிடக்கின்றன. மீண்டும் பயன்படுத்த முடியாத அளவில் அவை சேதப்பட்டு விட்டன. புற நகர அடுக்ககங்களில் முதல் தளம் வரை கூட வெள்ளம் புகுந்து நிற்கிறது. ஏரிகள் நிரம்பி விட்டன. அவை திறந்துவிடப் படுகின்றன. அல்லது உடைக்கப் படுகின்றன. தானாவே உடைகின்றன. மனித நேயம் தழைத்தோங்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனி மனித சேவையாளர்களும், சாதி மத இன வர்க்க பேதம் இன்றி, சட்டென உதவி என்று எங்கெங்கும் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். பிற மாநிலங்கள், பிற நாடுகள் உதவுவதற்காக முன் வருகின்றன. அரசியல் கட்சிகள், புடவைக்கடையில் பக்கத்தில் நிற்பவள் தேர்வு செய்யும் புடவ

இளமைக் கதை - உலருமுன் பனித்துளி

Image
உ ல ரு மு ன்  ப னி த் து ளி எஸ். சங்கரநாராயணன்   சு தாகர் நைன்த் பி. கடையில் மேப் வாங்கப் போனால் தோழியுடன் அவள். லதா. நைன்த் சி. அவள் கையில் தகதக பொலிவுடன் தங்கப் பேனா.       “இந்தப் பேனா எவ்ளோ?“       “நூத்தியம்பது ரூவா…“       “அவ்ளவா?“ என்று அழகாய் வெட்கப்பட்டாள். திரும்ப வைத்தாள். திரும்பி தன் தோழியிடம் “ரொம்ப அழகா இருக்கில்லே?“ என்றாள்.       உன்னை விடவா, என நினைத்தான் சுதாகர். தலையில் ரோசாப்பூ செருகியிருந்தாள். அது பின்பக்கம் என்றால், முன்பக்க ரோசாப்பூ… உன் உதடுகள்… என ஒரு திகட்டலுடன் நினைத்தான். என்ன வாங்க வந்தோம் என்றே அவனுக்கு மறந்திருந்தது. அது நேற்று.       இன்று இது. பள்ளிக்கூடம் விட்டு அவனும் சிவகுமாரும் சைக்கிளை எடுக்கிறார்கள். அவன் பக்கமாக சைக்கிளை உருட்டி அவள். சட்டென அவனை நிமிர்ந்து ஒற்றைப் பார்வை. திரும்பிக் கொண்டாள். உன்னை எனக்கு, ஓ தெரியுமே, என்கிற பார்வை. அவன் எதுவும் பேசியிருக்கலாம். அவன் பேச அவள் எதிர்பார்த்தும் இருக்கலாம். சே விட்டுவிட்டேன், என தாமதமாய் வருத்தமாய் இருந்தது.       பாடம் நடத்துகையிலேயே பாதியில் தூங்கிவிடும் சுதாகர். ராத்த

எனக்கு வயதாகி விட்டது

Image
எனக்கு  வயதாகி விட்டது • • • வே க வேகமாக மாறி வரும் உலகம். எலக்ட்ரானிக் உலகம். மின்னணு சாதனப் பொருட்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. துவைப்பது முதல் பாத்திரம் கழுவுவது வரை… இது நாம் பார்த்த உலகமா? நமது வேலைகள் என மனிதன் செய்ய எதுவுமே இல்லையா? 2 கண் முன்னே நம் குழந்தைகள் நம்மை விட பெரும் பணம் ஈட்டுகிறார்கள். செலவுகளும் அவ்வளவில் பெரும் வீச்சாய் இருக்கிறதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் உலகம். இதுகுறித்து நாம் சொல்ல எதுவும் இருக்கிறதா? அவர்களின் அந்த, பணக்கார உலகம், நமக்கு அது விளங்குகிறதா? 3 ஜக்கி வாசுதேவ் சொல்கிறார். நாம் சின்ன வயசில் ஆசைப்பட்டு இழந்ததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைக்க வேண்டாம். அது நாம் தோற்றுப்போன உலகம். அதை நாம் அவர்களிடம் திணிக்க முற்பட்டால், நம் தோல்வியை குழந்தைகள் சட்டெனக் கண்டு கொள்வார்கள். 4 நம் குழந்தைகள் நம் அடையாளங்களுடன், நம் குடும்ப அடையாளங்களுடன், நம் கலாச்சார அடையாளங்களுடன்… இதெல்லாம் சரியாக வந்திருக்கிறதா? ஒரு நிர்ப்பந்த அடிப்படையில் நாம் அதைக் கொண்டுவர முயல்வது சாத்தியமா? உலகம் சுருங்கிவிட்ட காலம்.