Posts

Showing posts from January, 2015
Image
short story * ஈருடல் ஓருயிர் எஸ். சங்கரநாராயணன் ( தா னறியாத அசதியில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அதற்கு உடம்பு சரியில்லை. மூச்சு விடும்போதே நெஞ்சில் கர் புர்ரென்று சளிக்கட்டு கேட்கிறது. இருந்த சளிக்கு உடம்பில் சூடு அதிகப்பட்டு லேசான ஜுரம் வேறு.. இரவு நெடுநேரம் வரை கண் திறக்காமல் சிணுங்கிக் கொண்டே இருந்தது. மாத்திரையோ மார்பில் தடவிவிட்ட மருந்தோ பெரிதும் பயன்படவில்லை.      எப்படியும் டாக்டரிடம் கூட்டிப் போனால் தான் சரியாகிறது. என்னதான் கைவைத்தியம் என்று போராடினாலும் டாக்டரிடம் போய் அவரது தட்சிணையை வைத்துவிட்டால் அநேகத்தரம் சரியாகி விடுகிறது. அவள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டாள். பத்து மணியளவில் தான் டாக்டர் வருவாள். நல்லவேளை. குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவள் விறுவிறுவென்று வீட்டு வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். பத்துப் பாத்திரங்களே தேய்ககாமல் கிடந்தன. வீடே கூட்டவில்லை இன்னும். அவளுக்கே வீட்டைப் பார்க்கப் பிடிக்கவில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் என்னவேலை ஓடுகிறது...  அதுவும் குழந்தைக்கு முழிப்பு வந்துவிட்டால் அது அழ ஆரம்0பிக்க
Image
WAR Fight for no man’s land Before and after 5140 எஸ். சங்கரநாராயணன் அ ங்க பகல்லியே பாலில் ஆடை கட்டினாப்போல வெயில். நம்மூரில் நிலாப்போல இங்கத்திய சூரியன். ஏந்திக் குடிக்க முடிஞ்சா எத்தனை ருசியாய் இருக்கும் என்று கிடந்தது. ராத்திரி பனிப்பொழிவு கடுமையாய் இருந்தது. சும்மாயில்லை... கடல்மட்டத்தில் இருந்து பதினைந்து பதினாறாயிரம் அடி உயரப்பகுதி என்கிறார்கள். அந்த மலைக்குப் பேர் கிடையாது. மனித நடமாட்டமே இல்லாத எல்லை வளாகம். பூகோளக் குறியீடா அதுக்கு எங்களிடம் 5140 என்று பெயர். மலையில் உயரம் அது. 5140 மீட்டர். பகலில் எதிரி முகாமை நோக்கி மேலேறிப் போக முடியாது. அவனுங்க மே...ல இருந்தாங்க. நம்மாளுங்க மேலேறி வரவர சுட்டுத் தள்ள சவுரியமாப் போச்சு. மலையானா நேர் செங்குத்து. குத்திக் குத்தி ஊனிக்கிட்டு ஏறணும். கை விட்டுப் போவும்லா. எங்க ஆபிசர் சொல்றமட்டும் நிக்காமக் கொள்ளாமல் ஏறிட்டே போகணும். இடைல ஒய்வெடுக்க இயலாது. எல்லாரும் ஒரேபோக்கில் முன்னே போறதுதானே நல்லது? அவசரப்பட்டு முன்றேர்றவன் முதல்ல மாட்டிக்குவாப்ல. அது சாவை நோக்கி முன்னேறினா மாதிரி ஆயிப்போகும். அதோட இல்ல விவகாரம்... அடுத
Image
ஊமையொருபாகன் எஸ். சங்கரநாராயணன் * * * சைக்கிளில் அவளை ஏற்றிக் கொண்டு நாகலூரணி போய்ப் படம் பார்த்தார்கள். வாத்தியார் படம்னு ஆசைப்பட்டு சிவாஜி படம்கூட இல்லாமல் ஜெய்சங்கர். அவன் படத்தில் விநோத ஜும்பர ஜும்பா தாளத்துடன் ஒரு பாட்டு இருக்கும். அப்பாவைக் கொன்னவனைப் பழி வாங்குவான். ஊ ரில் பாதி பேர் சுப்ரமணி. அப்ப மீதி பேர்? அவர்கள் வேற்றூரில் இருந்து பிழைக்க வந்தவாளா இருக்கும். ஊர் நடுவாந்திரத்தில் உப்பளமேடு போல சிறு குன்று. அறுவடை நெல் குவிச்சாப்போல. அதன் உசரத்தில் கோவில். அதைப் பாக்க கொள்ளை ஜனம். வந்து சேரும் ஜனங்களிலும் பாதி பேர் சுப்ரமணி. அடிவாரத்தில் நாவிதர்கள் - சுப்ரமணிகள் - கத்தி விரித்துக் காத்திருப்பார்கள். சிறு பிள்ளைகள் தென்னை மட்டையை நார் உரிச்சாப்போல... முடியுடன் உட்கார்ந்து மொட்டையாய் எழும். எதிரே ஊரணி. குளித்து மண்டைக்கு சந்தனாலங்காரம். புதுத்துணி உடுத்தி, பிற்பாடு பார்த்துச் சிரிக்க கந்தசாமி ஸ்டூடியோவில் ஒரு ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டு, மேடேறி சாமி கும்பிடும் இந்த மொட்டைகளைப் பார்த்து அடிவாரக் குரங்குகளுக்கே பயமாய்க் கெடக்கும். ஊரில் எல்லாவனும்
Image
ஒளிந்து கொண்டிருக்கும் தாய் * எஸ். சங்கரநாராயணன் மொ ட்டை மாடியில் இருந்து சூர்யோதயமும் அஸ்தமனமும் விவரிக்க இயலாத கிளர்ச்சி அனுபவமாய் இருந்தனது. ஊரில் அவன் பிளாட், தரைத்தளமும் இல்லாமல் மேல்தளமும் இல்லாமல் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும். மொட்டைமாடி மேல்தளத்துக்காரர்களின் குத்தகை போல. மேல்மாடியில் தளத்தையே மறைத்து அட்ச தீர்க்க ரேகைகளாய்க் கொடிகள்., எப்பவும் யார் வீட்டுத் துணிகளாவது காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே முகம் தெரியாமல் ஒரு குழந்தை உரக்கப் பாடம் படிப்பது மாத்திரம் கேட்கும். காற்றாடக் கொஞ்ச நேரம் போய் உட்கார முடியாது. மாடியில் இருந்து தெருக்கோடியும் அதைத் தாண்டி ஊரெல்லை வரை கூடப் பார்க்க முடிகிறது. பால்காரன். கோலம் போடும் பெண்களின் முதுகுப்புறம். புதுப்பட அறிவிப்புப் பலகையுடன் சினிமா வண்டி. தூரத்துப் பசிய வயல்கள். காற்றுக்குப் பயிர்கள் ஒருசேரத் தலையசைப்பது என்ன அழகு... எம்பியெஸ்ஸின் சேர்ந்திசை போல. நடுவே பாம்பாய் வளைபாதையில் பஸ்ஸோ ú ஸ ô லாரியோ சைக்கிளில் மனிதர்களோ போவது தெரியும். தோள்ச் சுமையுடன், குளித்த ஈர உடைகளுடன் ஜனங்களின் நடமாட்டம் பார்க்கலாம். காலை இருள
Image
நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி * பதிப்புரை சங்கராபரணம் 96-ம் ஆண்டு. தினமணி கதிரில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். ஞாநி தினமணி கதிர் பொறுப்பாசிரியராக இருந்தார். 'எஸ்.சங்கரநாராயணன் எவ்வளவு அருமையாக எழுதுகிறார்... ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான இடம் ஏன் கிடைக்கவில்லை' என்று கேட்டார். அந்த உரையாடலின் போது எஸ்.சிவகுமார், கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஆகியோர் இருந்தனர். அபிப்ராயங்கள் வளர்ந்தன. நான் அந்த இடத்தில் இருந்தேன். அவர்கள் எல்லோரையும்விட சங்கரநாராயணன் எனக்கு நல்ல நண்பர். சில நேரங்களில் நல்ல ஆசானாக இருப்பவர். எனக்கு அந்த விவாதம் தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதலாக இருந்தது. இறுதியில் ஞாநி கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. 'திறமைமட்டும் இருந்தால் இலக்கியத்தில் புகழின் உச்சத்தை அடைய முடியாதா? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?' என்னவெல்லாமோ செய்கிறார்கள். கேள்விப்படுகிற விஷயங்கள் கூச்சத்தைத் தருகின்றன. ஓர் எழுத்தாளன் செய்யக் கூடாததை எல்லாம் செய்து, எழுதிப் பிழைக்கிறா