Posts

Showing posts from July, 2015
Image
short story illustration - Rachana  * துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை * எஸ். சங்கரநாராயணன் ம னோகரி கல்யாணம் ஆகி ஐந்து வருடத்திலேயே கணவனை இழந்தவள். அவனது வேலையே அவளுக்குக் கிடைத்து பல இடர்கள் தாண்டி, ஒரு பெண்பிள்ளையை கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்து வந்தாள். மனோகரி வாழ்வில் அதிர்ச்சியாக அந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதுவும் கோவில் பிராகாரத்தில்! பிரதட்சிணம் போய்க்கொண்டிருக்கிறாள். சட்டென்று மின்சாரம் உயிரை விட்டு, பச்சக் என்று அவள் உதட்டில் யாரோ ஆண்மகனின் அவசர முத்தம். ஆவேச முத்தம். முத்த்த்தம்... என்ன அச்சானியம்! கோவிலில்! ஐயோ மின்சாரம் வந்துவிடுமோ என்று பதறிப் போனாள். கோபப்படுவதா பயப்படுவதா என்றே தெரியாத ஒரு உள்நடுக்கம். அது நிகழ்ந்த அந்தப் புயல் வேகம். மீசைக் குறுகுறுப்பு. எதற்கு அப்படிக் கடிக்கிறாப் போல ஒரு அழுத்தம்... வெளிச்சம் வருமுன் விலகிக்கொண்டு விறுவிறுவென்று அவன் போய்விட்டான். வெளிச்சம் வந்தபோது அவளுக்குப் பக்கத்தில் யாருமே இல்லை. சற்று தள்ளி பின்னால் ஒரு பெரியவர். முகத்தில் மீசையே இல்லை... அவள் நினைத்துப் பார்த்தாள். ஆம் மீசைக்கு