Posts

Showing posts from 2016
Image
சீதாயணம் எஸ். சங்கரநாராயண்ன ரா மச்சந்திரையருக்குப் பின், வீட்டு நிர்வாகம் பெரிய பிரச்சனையாகி விடும் போலிருந்தது. என்ன மனுஷன், என்ன ஆகிருதி. வில்வண்டியில் அவர் பயணம் போகிற கம்பீரம் என்ன, கையில் தகதகக்கிற கங்கணமென்ன, விரலின் நவரத்தின மோதிர ஜ்வலிப்பென்ன, அதை ஆட்டியாட்டி, அதிர்கிற குரலில் அவர் இடுகிற, கட்டளைகள் என்ன... வண்டிக்காரன் இருக்கிறான் என்றாலும் மாதங்கியைப் பார்க்கப் போகிறதனால் தனியே போவார். உயரமான காங்கேயம் காளைகள். பாய்ச்சலில் சூரப்புலிகள். ஏறி உட்கார்ந்து வாலைத் தொட்ட க்ஷணம் சிலிர்த்துச் சினந்து முன்னால் பாயும். ராமச்சந்திரையர் வண்டி என்கிற சலங்கைச் சத்தம் வீதி முனைவரை கேட்கும். கூடத்தில் பெரிய ஊஞ்சல். பெரிய மனுஷாள் என யார் வந்தாலும் உட்கார நாற்காலிகள் கிடக்கும். நடுவே அந்த ஊஞ்சல். அதுதான் அவரது யதாஸ்தானம். அவர் வரும்வரை எல்லாரும் காத்திருப்பார்கள். காலை நித்தியப்படி நியதிகளை முடித்துவிட்டு வந்து ஊஞ்சலில் அமர வயல் கணக்கு, ஊர்ப் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை, அரசியல் என்றெல்லாம் தனித்தனி வியாகூலங்கள் நடந்தேறும். லலிதா உள்ளே அவர் கண்ணசைவுக்குக் காத்திருப்பாள். அவரத
Image
கவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று தெரியும் தான். மூன்று நாளாய் மழிக்கப்படாததால் கன்னப் பகுதிகளில் சாம்பல் மூட்டம். வெண்மையும் கருமையும் குழம்பிய மங்கலான புதுநிறம். நியதிகள் தன்னைவிட்டு விலகி வருகின்றன என்று சார் உணர்ந்தார். தினசரி சவரம், கன்னம் பொலிய தனி மிடுக்குடன் சார் அலுவலகம் நுழைவார். வேகமும் தன்னம்பிக்கையும் சார்ந்த உறுதியான நடை. எல்லாம் கட்டுத் தளர்ந்திருக்கின்றன. மெதுவான நடை நடந்து நேற்று ஐந்து நிமிடத் தாமதத்துடன் அலுவலகம் நுழைந்தார். யாரும் கேட்கவில்லைதான். யார் அவரைக் கேட்க முடியும்? இருந்தாலும் லஜ்ஜையாய் இருந்தது. முதலில் கொஞ்ச நேரம் தயக்கத்துடனேயே பேச வேண்டியதிருந்தது. அவர் அறைக்குள் நுழைந்ததும் சேவகன் வந்து புது மேனேஜர் காத்திருப்பதாகச் சொல்லி விட்டுப் போனான். புது மேனேஜன். இளைஞன். கோட்டைக் கழற்றித் தோளில் போட்டிருந்தான். வாயில் சிகெரெட். ‘ஹல்லோ’ என உற்சாக வெள்ளமாய் உள்ளே நுழைந்தான். புகை பிடித்தபடி அவரது அறைக்குள் நுழைவது அவருக்குப் பிடிக்காது. அவர் அவனைப் பார்த்தார்
Image
நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் இந்துமதம் பத்தி யோசித்து ஒரு கதை வடித்திருக்கிறா ர்  என்பதே இதில் என் முதல் ஆச்சர்யம். வாழ்வும் சாவும் ஹென்ரிக் சியென்கிவிச் (போலந்து) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ப ரந்த இரு பெருவெளிகளின் நடுவே துல்லியமாக ஓடும் நதி ஒன்று. நதியின் கரைகள் ஓரிடத்தில் சரிந்திறங்கி குளம்போலும் அடங்கியது. உள்ளே உள்ளது உள்ளபடி தெரியும் அமைதியான நீரோட்டம். இந்தச் சிற்றாழப் பகுதியில் தண்ணீர் சற்று இருள் பழுப்பு கண்டிருந்தது. அதன் அடியில் பொன்னிற மணல்படுகை. தாமரைத் தண்டுகள் அதில் இருந்து முளைத்தெழுந்திருந்தன. அந்தத் தண்டுகளில் வெண்மையும் சிவப்புமான மலர்கள், மினுமினுக்கும் நீர்ப் பரப்புக்கு மேல் மலர்ந்திருந்தன. பலவண்ணச் சிறு வண்டுகள் பட்டாம்பூச்சிகள் என அந்தப் பூக்களைச் சுற்றின. கரைபக்கம் பனை மரங்கள். உயர உயரங்களில் புள்ளினங்களின் வெள்ளிமணி யோசை போன்ற சப்தயெடுப்புகள். அந்த இரு பிரதேசங்களுக்கும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் கடந்து போய்வரும் வழியாக இந்தக் குளம் இருந்தது. முதல் பிரதேசம் வாழ்க்கை வெளி என்று அழைக்கப்பட்டது. மற்றது மரண வெளி. மகா புருஷனும் சர்வ வ
Image
courtesy - solvanam net magazine ஒரு கிறிஸ்துமஸ் மாலை   லாங்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் எஸ். சங்கரநாராயணன் அ வள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் ஜிலு ஜிலு ஜிகினாத் தொங்கல்களுடன் அலங்காரமாய்க் கூடத்தில். அதற்கு இன்னும் என்னவோ குறை என்று சாமான்கள் வாங்க எல்லாரும் வெளியே போயிருக்கிறார்கள். அங்கங்கே அதற்கு மெழுகுவர்த்திகள். அதை இனி ஏற்றவேண்டும். அவை காத்திருக்கிறாப் போலிருந்தது. ஜோவுக்கும் ஒரு மரம் தன்னால் தர முடிந்தால் நல்லா யிருக்கும், என அர்சி நினைத்துக் கொண்டாள். இன்னுங் கூட