Posts

Showing posts from January, 2016
Image
shortstory ஊதல் உதைபட வாழ்தல் எஸ். சங்கரநாராயணன்   அ வன் தம்பி. அவள் அக்கா. அவனது நடவடிக்கைகளை அவள் கண்காணித்தாள். வயசுக் கோளாறு இது. பெரியவர்களிடம் நின்று பேசுகிறானில்லை. மதிப்பு மரியாதை எல்லாம் போச்சு. அலட்சியமாய் பதில் சொல்கிறான். அவனது நடவடிக்கைகள் திருப்திகரமானதாய் இல்லை. இதை விடக்கூடாது. அவனைத் திருத்துகிற, வழி நடத்துகிற, கண்டிக்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் அவன் அக்கா. கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்தாள். பெட்டிக் கடைப் பக்கம் பிரகாசம். தம்பி. அங்கே அவனுக்கு என்ன வேலை? பார்த்தும் பாராதது போல் நிற்கிறான். கூட யார் யார்? ஓரக்கண்ணால் சிறிது எரிச்சலுடன் பார்த்தாள். அந்தக் காலர் பனியன் - நான் பார்க்கிறதில் சுவாரஸ்யப்பட்டு, உற்சாகமாய் சூயிங்கம் மெல்கிறான். ராஸ்கல். ‘பிரகாசம்?’ சற்று தள்ளி நின்று கொண்டு கூப்பிட்டாள். அவன் அதை எதிர்ப்பார்க்கவில்லை. திரும்பி, கிட்டே போக யோசித்து, வராமல், என்ன, என்று பார்த்தான். என்ன இங்கே நிக்கறே - ‘பள்ளிக்கூடம் இல்லியா?’ என்று கேட்டாள். ‘மதிய எக்சாம்’ ‘அப்ப படிக்க வேண்டாமா?’ ‘படிச்சிட்டேன்’ ‘ஒரு த
Image
வள்ளுவர்  கம்பர் மற்றும்  சங்கரநாராயணன் மூ த்த மகனின் திருமணத்தன்று வெளியிட என்று இப்படியாய், நான் அவ்வப்போது திருமணம்சார்ந்து எழுதிய கதைகளைத் தொகுக்கத் திட்டம் வகுத்துக் கொண்டேன். காலத்தின் ஓட்டம் அத்தனை சீரானது என்று சொல்ல முடியாது. காலம் சீராய் ஓடலாம். 24 மணித்தியாலங்கள் சேர்ந்தது ஒருநாள், என்கிற அளவில் அதன் ஒழுங்கு அமைந்திருக்கலாம் தான். ஆனால் நம் மனம் சில இடங்களில் சற்று நிதானித்துப் பயணப்படுகிறது. திருப்பதி நடைப்பயணத்தில், படிக்கட்டில் ஏறிச்செல்கையில் சில இடங்களில் நாம் உட்கார்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, பின் மீண்டும் மலையேறுவது போல. இந்த வைபவம் திருமணம்... அதைப்பொருத்த மட்டில் திருமண நாளை விட அதன் முந்தைய பிந்தைய நாட்கள் மகத்துவம் வாய்ந்தவை. அவை திருமண நாளை அழகுபடுத்துகின்றன, ஒரு ராகத்தின் ஆலாபனை போல! இதில் காதல்திருமணங்கள் இன்னும் சிறப்பு என்று சொல்லலாம். காதல், திருமணத்திற்கான ஆலாபனை தானே! அரிதாரம் பூசிக்கொள்கிறது காலம். திட்டமிட்டு வருவதா காதல்? திடீர் மழை போல, நாம் இங்கேயும் ஒதுங்கமுடியாமல், அங்கேயும் நிற்க முடியாமல்... குடையை விரிக்கு முன் முழுக்க நனைத்த

short story - கண்ணாடி - சைலபதி - artist Jeeva

Image
சிதம்பரம் கண்ணாடியைக் கொண்டுவைத்த நாளிலிருந்து அதோடுதான் அதிகநேரம் செலவழித்தார். உள்ளாடைகளோடு நின்று தன்னுடல் அழகு பார்ப்பது, அடிக்கடித் தலையைச் சீவிக்கொள்வது என்று கண்ணாடி முன் வந்து நின்றபடி இருந்தார். மாறாக மீனாட்சிக்குக் கண்ணாடி ஒரு தொந்தரவாக மாறிப்போனது. அது அவளின் வடிவமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் அவள் உடலை இன்னும் பூதாகாரமாகக் காட்டியது அல்லது அவளுக்கு அப்படித் தோன்றியது. கண்ணாடி சைலபதி                                        கா லை ஐந்தரை. இந்தநேரத்தில் அவளை மொபைலில் அழைப்பது யார் என்று சிதம்பரத்துக்கு மனதுக்குள் குருகுருத்தது. நேற்றும் இதேநேரம் போன் வந்தது அவளுக்கு. அவள் தொலைபேசியைப் படுக்கையிலேயே போட்டுவிட்டு முகம்கழுவப் போனாள். அவள் உள்ளே சென்று தாழிடும்வரை காத்திருந்து அவசர அவசரமாக போனை எடுத்து அழைப்பு வந்த எண்ணைத் தேடினார். ஆனால் முன் ஜாக்கிரதையாக மீனாட்சி அழைப்பு வந்த தடத்தை அழித்துவிட்டிருந்தாள். கோபம் வந்தது. எவ்வளவு திமிராக நடந்துக்கொள்கிறாள். இன்றைக்கு உண்டு இல்லை என்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மீனாட்சி பாத்ரூமிலிருந்து வெளியேவந்த கண

புதுத் தெரு கதவிலக்கம் 1 - சிறுகதை

Image
பு து த்  தெ ரு கதவிலக்கம் 1 * எஸ். சங்கரநாராயணன் * பே ப்பரில் விளம்பரம் பார்த்துவிட்டு ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். எப்படியும் அந்தப்பகுதி புரோக்கர்கள் தலையீடு இல்லாமல் கிரயம் பேசிவிட அவர் தீர்மானம் பண்ணிக் கொண்டிருந்தார். அவரது முழு சேமிப்பும் இதில் கிடக்கிறது. பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தார். தன் காலம் முடியும் வரை அதை விற்க நேராது என்றுதான் நம்பியிருந்தார். “என்ன சாமி, வூட்டைக் குடுத்துர்றாப்லியா?” என்றபடியே சின்னக்கண்ணு வந்து பல் குத்தியபடியே வீட்டைப் பார்த்தான். செய்தித்தாள் பார்த்துவிட்டு வந்திருந்தான் போல. அந்தப் பகுதி புரோக்கர் அவன். குடித்திருக்கலாம். அதுபற்றி என்ன, இந்தக் காலத்தில் குடி சகஜமாகித் தான் விட்டது! “இல்லியே? யார் சொன்னா?” என்றார் அவர். “அக்ஹ்” எனச் சிரித்தான் சின்னக்கண்ணு. “நம்மை மீறி இந்த ஏரியாவுல எந்தக் காரியமும் நடக்காது சாமி...” அவன் சிரிப்பு ரொம்ப விகாரமாய் இருந்தது. சாதாரணமாய்ப் பேசுகிறானா மிரட்டுகிறானா என்றே தெரியவில்லை. வேண்டாத பகை, புகைய ஆரம்பிக்கிறதோ என்று பயமாய் இருந்தது. அவனைப் பார்த்ததும் வாசலில் நின்றிருந்த இந்து உள்ளே போய்வ
Image
short story ஏரிக்கரை நாகரிகம் எஸ். சங்கரநாராயணன் * “சென்னையில் எங்க போனாலும்  250 அடி 300 அடியிலும் தண்ணீ இல்லை. அதான் ஏரிப் பக்கமா வீடு வாங்கிட்டு வந்தம். இப்ப இப்பிடிப் பிரச்னை…” *  ம ழை என்றால் சன்ன மழை இல்லை. சிறு காற்றுடன் மரங்கள் அசைந்தசைந்து, சொகுசு கொண்டாடிக் குளிக்குமே, அந்த மழை இல்லை இது. மரங்கள் அசையவே இல்லை. கன மழை. கனம் தாங்காமல் மேகக் கொழுக்கட்டை உடைந்து உதறி தள்ளிவிட்டு விட்டது தண்ணீரை. மேகத்தின் இடுப்பில் இருந்து இறங்கி குடுகுடுவென்று ஓடும் குழந்தை. அவள் அறிந்து இத்தனை ஆண்டுகளில் இப்படியொரு மழை, பெய்ததே இல்லை. சான்ஸ்லெஸ்! சற்று தாழ்வான பகுதி தான் இது. தெருக் குழாயில் தண்ணீர் இன்னும் வேகமாக வரும். மேட்டுப்பகுதிக் காரர்கள் பொறாமைப் படுவார்கள். சின்ன மழைக்கும் தெருவில் தண்ணீர் சலசலவென்று ஓடும். ஆனால் வடிந்து விடும். அடுக்ககத்தில் முதல் தளம், என அந்த வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. மழைக்காலங்களில் சிறு ஓடையாய் மழைத் தண்ணீர் உள் தரை தெரிய ஓடும். வேறு அசுத்தங்கள் சேராத சுத்தமான தெளிவு. “தொப்புள் தெரிய சேலை கட்டிய பெண்ணைப் போல,” என்றான் மகேந்திரன் ஒருநாள்.